×

அட்லீ படத்தில் ரவிமரியா ஹீரோ!

காமெடி நடிகர்கள் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சீசன் இது. அவ்வகையில் ரவிமரியா இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்கும் படம் ‘அட்லீ’. ரவிமரியாவிடம் பேசினோம்.இது காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும் சீசன் என்பதால் மட்டும் ஹீரோவாக களத்தில் குதிக்கவில்லை. எப்போதும் எனக்கு அப்படியொரு ஆசை இருந்ததில்லை. சிறந்த வில்லன், சிறந்த காமெடியன், சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற வட்டத்துக்குள் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறேன்.

‘அட்லீ’ படத்தைப் பொறுத்தவரை எனக்கே எனக்கு என்கிற மாதிரி டெய்லர் மேட் ரோல் கிடைத்ததால் ஹீரோவாக நடிக்க சம்மதித்தேன். எனக்கு ஜோடியாக பிங்கி நடிக்கிறார். ஜோடி என்றதும் ஆடிப்பாடி சல்லாபம் பண்ணும் வாய்ப்பு இருக்கும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.
டூயட், ரொமான்ஸ் இல்லை என்பதாலேயே இந்தப் படத்தை கமிட் பண்ணினேன். டூயட் பாட நான் ஒண்ணும் டீன் ஏஜ் பையன் கிடையாது.

என்னை மாதிரி முத்தின கத்திரிக்காய் ஹீரோவா நடிக்கும்போது விமர்சனங்கள் தாறுமாறா வந்து விழும் என்று எனக்கே தெரியும். படம் பார்த்துவிட்டு ரவிமரியாவுக்கு வேண்டாத வேலை எதுக்கு என்று கமெண்ட் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். மற்றபடி தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் ஐடியா இல்லை. எனக்கு பொருத்தமாக இருந்தால் பண்ணுவேன் என்றவர் தற்போது நடிக்கும் படங்களைப் பட்டியலிட்டார். இப்போ ‘கூர்கா’ படத்தில் ‘3.0’ மினியேச்சர் ரஜினி கெட்டப்பில் நடிக்கிறேன்.

‘வெண்ணிலா கபடிக் குழு- 2’ படத்தில் சின்சியர் அப்பாவாகவும், என்னுடைய ஆஸ்தான இயக்குநர் எழில் இயக்கும் ‘ஜெகஜாலக் கில்லாடி’ யில் காமெடி வேடத்திலும், சினிமாவில் என்னை நடிகனாக அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கும் ‘ஜெயில்’ படத்தில் சீரியஸ் வில்லனாகவும், ‘காட்டேரி'யில் லெக்கிங்ஸ் அணிந்து படம் முழுக்க டிராவலாகக்கூடிய ரோலிலும், ‘பார்ட்னர்’ படத்தில் மினிஸ்டர் வேடத்திலும், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஐயம் சிங்கிள்’ படம் உட்பட விரைவில் வெளிவரவுள்ள படங்களில் வித்தியாசமான ரவிமரியாவைப் பார்க்கலாம்.

சில வருடங்களுக்கு முன் நான் இயக்கிய ‘மிளகாய்’ படத்தை மனதில் வைத்து எல்லோரும் இயக்குநர் ரவிமரியாவை எப்போது பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். விரைவில் ‘மிளகா-2’ எடுக்கும் ஐடியா இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் ரவிமரியாவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. நண்பர் நட்டி மூன்று படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருப்பதால் பிஸியாக இருக்கிறார். அந்த கமிட்மென்ட் முடிந்ததும் பட வேலைகளையும் ஆரம்பிக்கஉள்ளோம் என்றார்.

Tags : Ravimaria ,hero ,Adli ,
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...